/* */

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டரை மாற்ற சமூக ஆர்வலர்கள், மக்கள் எதிர்ப்பு!

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டரை மாற்றும் முடிவுக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டரை மாற்ற சமூக ஆர்வலர்கள், மக்கள் எதிர்ப்பு!
X

கூடுவாஞ்சேரி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அசோகன்.

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் உட்கோட்டத்தில் அடங்கிய கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக அசோகன் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் படாளம் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே இடத்தில் அவரை பணியமர்த்தவும் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், இன்ஸ்பெக்டர் அசோகன் பொறுப்பேற்பதற்கு முன்பு கொலை, கொள்ளை, அடிதடி, வழிப்பறி, திருட்டு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தது. ஆனால் அவர் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றதற்கு பின்பு கடும் நடவடிக்கையால் குற்ற சம்பவங்கள் குறைய தொடங்கின.

இதனால் குற்றவாளிகளின் நடமாட்டம் அதிக அளவில் இல்லை. அவ்வப்போது துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். சமூக அக்கறையுடன் சாலையோரத்தில் வசிக்கும் ஏழைகளுக்கு தனது சொந்த செலவில் உணவுகளை வாங்கி கொடுத்து வந்தார்.

கட்டப்பஞ்சாயத்து செய்ய வருபவர்களை காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கமாட்டார். அவர் பொறுப்பேற்ற நாளிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவருடைய செயலை பார்த்து பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டி வந்தனர்.

அவரை படாளம் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்தது வேதனை அளிக்கிறது. சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு இடமாற்றம் உத்தரவை ரத்து செய்து அசோகன் இன்ஸ்பெக்டரை மீண்டும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் பணியில் அமர்த்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் வலியுறுத்துகின்றனர்.

#SocialActivists #people #protest #change #Guduvancheri #police #inspector #கூடுவாஞ்சேரி #போலீஸ்இன்ஸ்பெக்டரை #மாற்ற #சமூகஆர்வலர்கள் #மக்கள் #எதிர்ப்பு

Updated On: 9 Jun 2021 6:35 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!