விவசாய வாடகை இயந்திரங்களுக்கு கடும் டீசல் தட்டுபாடு: விவசாயிகள் வேதனை

வேளாண் துறையில் வழங்கப்படும் வாடகை இயந்திரங்களுக்கு, கடும் டீசல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விவசாய வாடகை இயந்திரங்களுக்கு கடும் டீசல் தட்டுபாடு: விவசாயிகள் வேதனை
X
வேளாண் இயந்திரங்கள்.

வேலையாட்கள் பற்றாக்குறையினால் பண்ணைப் பணிகளை விவசாயிகள் குறித்த காலத்தில் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது.

எனவே, நவீன வேளாண்மையில் "வேளாண்மை இயந்திரமயமாக்குதல்" தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவையாக உள்ளது.

வேளாண் இயந்திர மயமாக்கலினால் மட்டுமே, பண்ணைப் பணியாளர் பற்றாக்குறையினை எதிர்கொள்ள முடியும். கிராமப் புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு பணியாளர்கள் இடம் பெயர்வது அதிகளவில் நடைபெறுகிறது.

பண்ணை பணியாளர்கள் தேவை மற்றும் இருப்புக்கு இடையிலான இடைவெளியினைக் குறைத்து வேளாண் உற்பத்தியினை உயர்த்துவதில் வேளாண் இயந்திர மயமாக்கல் மிகவும் உதவிகரமாக உள்ளது.

டிராக்டர்கள், பவர் டில்லர்கள் மற்றும் இதர வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்குத் தேவையான அளவு கிடைத்தால்தான், உணவுதானிய உற்பத்தி உயர்வு என்பது சாத்தியம்.

தனிப்பட்ட விவசாயிகள் விவசாயிகள் குழுக்களுக்கு வாடகைக்கு விடுவதற்காக, 2011-12 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பயிர் சார்ந்த வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், பல்வகைப்பயிர் கதிரடிக்கும் இயந்திரம், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், நாற்று பையில் மண் மற்றும் இதர இடுபொருட்களை நிரப்பும் இயந்திரம்,

குழி தோண்டும் கருவி, விதைக்கும் கருவி, மரக்கிளை கவாத்து செய்யும் கருவி, டிராக்டர் மற்றும் பவர் டில்லரால் இயக்கும் கருவிகள் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் மூலம், வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்கத் திட்டத்தின் வழிகாட்டுதலின்படி, விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் விடப்பட்டு வருகின்றன.

ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயத்தில் முக்கிய பங்காற்றும் பகுதிகளான செய்யூர், மதுராந்தகம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேளான்மைத்துறை மூலமாக வாடகைக்கு வழங்கப்பட்டு வரும் இயந்திரங்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, விதை நாற்று விட்ட விவசாயிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் கதிரடிக்கும் இயந்திரம், நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம், நாற்று பையில் மண் மற்றும் இதர இடுபொருட்களை நிரப்பும் இயந்திரம், குழி தோண்டும் கருவி, விதைக்கும் கருவி,

மரக்கிளை கவாத்து செய்யும் கருவி, டிராக்டர் உள்ளிட்ட வேளாண் விவசாய இயந்திரங்களுக்கு விவசாயிகள் முன் பதிவு செய்தபோதிலும், டீசல் தட்டுப்பாட்டு காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஓரிரு நாட்களில் டீசல் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு விவசாய பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

Updated On: 16 Sep 2021 6:00 PM GMT

Related News