/* */

தாம்பரம் அருகே ராட்சத லாரி இடித்து மின்சாரம் துண்டிப்பு : சமூகஆர்வலர் குற்றச்சாட்டு

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே ராட்சத லாரி இடித்ததால் மின் கம்பம் சரிந்து மின்சாரம் துண்டித்து மக்கள் அவதிப்படுகின்றனர் என சமூக ஆர்வலர் றினார்.

HIGHLIGHTS

தாம்பரம் அருகே ராட்சத லாரி இடித்து மின்சாரம் துண்டிப்பு : சமூகஆர்வலர்  குற்றச்சாட்டு
X

தாம்பரம் அருகே ராட்சத லாரி இடித்து மின் கம்பம் சரிந்து அப்பகுதி வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 34 ஜட்ஜ் காலனி பகுதியில் தனியார் ராட்சத லாரி ஒன்று கட்டிட பணிக்காக இரும்பு கம்பிகளை ஏற்றிவந்தது. இந்நிலையில் மின்கம்பம் ஒன்றின் மீது மோதியதில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து, நீண்டநேரம் மின் தடையால் இரவில் மக்கள் தூக்கம் இழந்தனர். இதனால், ஜட்ஜ் காலையில் அமைக்கபட்டுள்ள உயர்தேக்க குடிநீர் வினியோக தொட்டியில் தண்ணீரை ராட்சத மின் மோட்டார் மூலம் ஏற்றும் பணி பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அவதியை கருத்தில் கொண்டு மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களின் இணைப்பு மையத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான லயன் முனைவர்.கோவிந்தராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றவும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காலை சமையல் செய்யவும் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்கள் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் துரிதமாக தீர்வு காண வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கங்களின் இணைப்பு மையத்தின் தலைவரும், சமூக ஆர்வலருமான லயன் முனைவர்.கோவிந்தராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On: 22 Jun 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு