/* */

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட  ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு
X

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் தற்போது ஒமிக்ரான் மற்றும் உருமாறிய கொரோனா தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என தனித்தனியாக மொத்தம் 439 வார்டுகள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒமிக்ரான் தொற்று சிகிச்சைக்கு 32 படுக்கையுடன் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டும் ஆக்ஸிஜன் இல்லாத தேவைப்படும் பட்சத்தில் ஆக்ஸிஜன் பொருத்தக்கூடிய நிலையில் 32 படுக்கை வசதியுடன் ஒரு கொரோனா வார்டும் குழந்தைகளுக்கான 100 படுக்கையுடன் கூடிய சிறப்பு கொரோனா வார்டும் தயார் நிலையில் உள்ளதாகவும் அப்போது கூறினார்.

மேலும் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு இதுவரை ஒமிக்ரான் தொற்றுடன் ஒரு நபர்கூட வரவில்லை. இன்று ஒரேநாளில் உருமாறிய கொரோனா தொற்று 28 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு அவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மருத்துவமனையில் போதுமான படுக்கைவசதி மற்றும் ஆக்ஸிஜன் இருப்பு பற்றியும் கூறினார். அதனை தொடர்ந்து கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு கொரோனா அறிகுறி குறித்து பிரிசோதனை செய்யும் வார்டு ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Updated On: 6 Jan 2022 1:58 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்