/* */

செங்கல்பட்டில் ஞாயிறு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்

செங்கல்பட்டில் ஞாயிறு முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்த பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் ஞாயிறு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
X

ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படும் சாலை.

கடந்த இரண்டு வருடங்களாகவே பரவலாக அனைவரது காதிலும் ஒலிக்கக்கூடிய ஒரு சொல் கொரோனா வைரஸ். உலக மக்கள் அனைவரையும் நடுநடுங்க செய்த கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. பல்வேறு வகையாக அவை உருமாறிக்கொண்டே வருகிறது.

இதனை தடுக்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்துதல் போன்ற பல வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தாலும் கொரோனாவின் தாக்கம் தணியவில்லை. மேலும் அரசு வகுத்த கட்டுப்பாடுகளும் முக்கியமானது ஊரடங்கு.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு செயல்முறை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள், போக்குவரத்து என அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பித்தது. ஆனால் சில தினங்களுக்கு பிறகு கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியதையடுத்து படிப்படியாக ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டு வந்தது. மேலும் மக்களை காக்கும் பொருட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டது.

தற்போது கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரான் மக்களை மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. கொரோனா அளவிற்கு ஒமிக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் இதன் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது.

இந்த ஒமிக்ரான் பரவல் தமிழகத்திற்குள் ஊடுருவியதால், மீண்டும் ஊரடங்கு எனும் இருண்ட அறைக்குள் மக்கள் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. ஒமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு இன்று தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.

இந்த நிலையில் ஞாயிறு ஊரடங்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் முழுமையாக அமல்படுத்த பட்டுள்ளதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரியாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 2800க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படு வருகின்றனர்.

இதனிடையே ஞாயிறு ஊரடங்கு கோவையில் முழுமையாக அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை முன்னிட்டு செங்கல்பட்டு, மாமல்லபுரம், பல்லாவரம், மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர்,சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சாலைகள் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

அதேபோல் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Updated On: 16 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?