செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில், விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் தேங்கியது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை
X

செங்கல்பட்டில் இரவில் பெய்த மழை. 

வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இதனை தொடர்ந்து, நேற்று மாலை முதல், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. செங்கல்பட்டு நகர பகுதியில் இரவு வெளுத்துவாங்கிய கன மழை காரணமாக, அரசு தலைமை மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம் உள்பட ஜி.எஸ்.டி சாலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீரானது பெருக்கெடுத்து ஓடியது.

ஏரி குளங்களுக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்றானமதுராந்தகம் ஏரியில் தற்போது 23.80 அடியாக உயர்ந்து, 690 கன அடி நீர் உள்ளது.

Updated On: 26 Nov 2021 1:15 AM GMT

Related News