/* */

செங்கல்பட்டு: 3 தொழிலாளிகள் கொரோனாவுக்கு பலி-சக தொழிலாளர்கள் போராட்டம்

செங்கல்பட்டு அருகே தனியார் தொழிற்சாலையில் 3 தொழிலாளிகள் கொரோனாவுக்கு பலியானதால் சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு: 3 தொழிலாளிகள் கொரோனாவுக்கு பலி-சக தொழிலாளர்கள் போராட்டம்
X

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகே தனியார் கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இத் தொழிற்சாலையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக அந்நிறுவனத்தில் பணி புரியும் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்து அடுத்து மூன்று ஊழியர்கள் பலியாயினர்.

ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து சக தொழிலாளர்கள் முறையான விடுப்பு அளிக்கவும், கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க கோரியும் அந்நிறுவனத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய நிர்வாகம், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்கள் நிறுவனத்திற்கு விடுமுறை அளிப்பதாக தகவல் தெரிவித்தனர் . இதனை அடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கினார். மேலும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 27 May 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  2. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  3. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  6. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  7. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  8. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  9. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...