/* */

சாலையோரக் கடைகளை முன்னறிவிப்பின்றி அகற்றிய நகராட்சி அதிகாரிகள்: வணிகர்கள் முற்றுகை

செங்கல்பட்டில் சாலையோரக் கடைகளை முன்னறிவிப்பின்றி நகராட்சி நிர்வாகம் அகற்ற முயன்றதால் வணிகர்கள் முற்றுகை

HIGHLIGHTS

சாலையோரக் கடைகளை முன்னறிவிப்பின்றி அகற்றிய நகராட்சி அதிகாரிகள்: வணிகர்கள் முற்றுகை
X

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முக்கிய வீதியான இராஜாஜி தெருவில் துணிக்கடைகள் வணிக வளாகங்கள் சிறு கடைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இன்று மாலை திடீரென ஜேசிபி இயந்திரத்துடன் அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் சாலையோரத்தில் உள்ள கடைகளை அகற்ற முயன்றனர். இதனை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் நகராட்சி அதிகாரிகளையும் போலீசாரையும் முற்றுகையிட்டு நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த ஏஎஸ்பி ஆதர்ஸ்பசேரோ வணிகர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, வணிகர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து வணிகர்கள் கூறுகையில்:- கடந்த 25 ஆண்டுகாலமாக ராஜாஜி தெருவில் ஏராளமான கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். அனைத்து கடைகளுக்கும் நகராட்சி நிர்வாகத்துக்கு முறையான வரிகளையும் செலுத்தி வருகிறோம் எனவும் ஆனால் தற்போது முன்னறிவிப்பின்றி சாலையோரங்களில் உள்ள தடைகளை நகராட்சி நிர்வாகம் திடீரென அகற்றினால் சிறுவணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

அதிகாரிகள் எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்து வணிகர்களின் கடைகளை இவ்விடத்திலேயே நடத்த வழிவகை செய்யவேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தனர்.

Updated On: 3 Aug 2021 2:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  4. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  6. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்