/* */

செங்கல்பட்டு: சலூன் கடைகளை திறக்க நடவடிக்கை- முடிதிருத்துவோர் சங்கம் கோரிக்கை!

செங்கல்படு மாவட்டத்தில் சலூன் கடைகளை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முடிதிருத்துவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு: சலூன் கடைகளை திறக்க நடவடிக்கை- முடிதிருத்துவோர் சங்கம் கோரிக்கை!
X

முடி திருத்தும் கடை.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறந்திருப்பதற்கு எந்த தடைகளும் விதிக்கப்படவில்லை.

தற்போதுள்ள கட்டுப்பாடுகளின்படி, சலூன் கடைகள் திறப்பதற்கு அனுமதியில்லை. முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் அரசு வழிகாட்டுதலின்படி நாங்கள் கடைகளை திறக்க தயாராக உள்ளோம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வேலையின்மை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஊரடங்கின்போது ரூ.2 ஆயிரம் கொரொனா நிவாரண நிதியாக வழங்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரையில் இந்த ஆண்டு முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலமாக எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை.

இதன் காரணமாக முடிதிருத்தும் தொழிலாளர்களின் நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக கடைகளை திறக்க உத்தரவிடவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 10 Jun 2021 7:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  2. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  4. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  5. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  6. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  7. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  8. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    பொடுகுக்கு இயற்கையான தீர்வுகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்புகழை பாட பாட வாழ்க்கை மணக்கும் - திருப்புகழ் பெருமையை...