/* */

சிவசங்கர் பாபாவின் ஜாமீன் வழக்கு நான்காவது முறையாக நிராகரிப்பு

பாலியல் வழக்கில் கைதாகி உள்ள சிவசங்கர் பாபாவின் போக்ஸோ ஜாமீன் வழக்கு நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டது

HIGHLIGHTS

சிவசங்கர் பாபாவின்  ஜாமீன் வழக்கு நான்காவது முறையாக  நிராகரிப்பு
X

சிவசங்கர் பாபா மீண்டும் ஜாமீன் கேட்டு இன்று செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜரானார்

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது பாலியல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கின்கீழ் கைது செய்து சிபிசிஐடி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் அன்மையில் முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்ததன் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது கடந்த மாதம் இரண்டாவதாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் சிவசங்கர்பாபா சார்பில் அவரது வழக்கறிஞர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு மீதான வழக்கு விசாரணை நீதிபதி தமிழரசி முன்னிலையில் ஏற்கனவே வந்த நிலையில் இரண்டு போக்ஸோ வழக்கிலும் மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபா மீண்டும் ஜாமீன் கேட்டு இன்று செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் பாபா பாபா என கதறி அழுதனர். மேலும் அவரை அழைத்துவந்த வாகனத்தை நோக்கி ஓடினர் இதன் காரணமாக அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. பாதுகாபு கருதி போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி 4வது முறையாக ஜாமீன் மனுவை நிராகரித்து, இவ்வழக்கை வருகின்ற 5ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க ஒத்தி வைத்தார்

Updated On: 22 July 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. ஈரோடு
    ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால்
  8. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    வெயிலில் வாடிய பெண்களுக்கு வழங்கப்பட்ட குடை மற்றும் தண்ணீர் பாட்டில்
  10. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!