/* */

செங்கல்பட்டில் ஆயுதபூஜை விற்பனை மந்தம்: வியாபாரிகள் வேதனை

செங்கல்பட்டில் ஆயுதபூஜை விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் ஆயுதபூஜை விற்பனை மந்தம்: வியாபாரிகள் வேதனை
X

ஆயுத பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் சிரமமடைந்த வியபாரிகள்.

ஆயுத பூஜை விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட பூசணிக்காய் உள்ளிட்ட பூஜைக்குரிய விற்பனை பொருட்கள் மந்த நிலையில் விற்பனை ஆவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்

இந்துக்களின் திருவிழாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா முக்கிய திரு விழாவாகும். ஒன்பது நாட்களும் அனைத்து கோவில்கள் விழா மற்றும் பல்வேறு விழா குழுவினரால் கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாவ.

இந்த நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையில் வீடுகளில் படிக்கும் மாணவர்களின் புத்தகங்கள் சான்றிதழ்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை வைத்து பொரி அவல் கடலை என பூஜை பொருட்கள் வைத்து பூஜை செய்வார்கள்.

மேலும் அனைத்து வாகனங்களையும் கழுவி சுத்தம் செய்து பூஜை போடுவார்கள். இதேபோல் கடைகள், தாபனங்கள், கம்பெனிகள், பெரிய நிறுவனங்கள், என பெரிய அளவில் ஆயுத பூஜை விழாவை சிறப்பாக கொண்டாடி பூஜை செய்வது வழக்கம்.

ஆயுத பூஜையையொட்டி கடைவீதிகளில் பூசணிக்காய் பழங்கள் காய்கறிகள் பொரிகடலை பூக்கள் என ஏராளமானோர் பல்வேறு ஊர்களில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்து வியாபாரம் செய்வது வழக்கம். இந்த ஆண்டும் ஆயுதபூஜை ஏராளமான வியாபாரிகள் செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வாழைக் கன்றுகள் பூசணிக்காய்கள், திருஷ்டி பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து வைத்து சீசன் வியாபாரம் செய்கின்றனர்.

ஆனால் இந்த ஆண்டும் கொரொனா காராணமாக பொதுமக்கள் பல்வேறு பெரிய கம்பெனி, நிறுவனங்கள் ஆயுத பூஜைகள் எளியமுறையில் கொண்டாடப்படுவதால் வியாபாரம் இன்றி கொண்டு வந்த பொருட்களை விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செங்கல்பட்டில் வியாபாரி ஒருவர் கூறுகையில்:- வாழைமரம், பூசணிக்காய், என வாங்கி வந்து கடை வைத்தோம் ஆனால் வியாபாரம் என்பது இல்லாமல் போட்ட பணத்தை எடுக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. . வாழைக்கன்று ஜோடி ஐம்பதிலிருந்து நூறு வரையும், அதற்கேற்ப பூசணிக்காய் விலை ரூபாய் 30 லிருந்து 100 ரூபாய் வரை விற்கின்றோம்.

ஆனால் ஆண்டுதோறும் இருக்கும் கூட்டமும் வியாபாரமும் இல்லாமல் சோர்ந்து உள்ளோம். எல்லா வியாபாரமும் மந்தமாகத்தான் உள்ளது. இதில் பூக்கள் வியாபாரமும் மிகவும் மந்தமாகவே உள்ளது. சாமந்திப்பூ தரத்திற்கேற்ப விற்பனை இருந்தாலும் வாடிக்கையாளர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளதால் உரிக்காமல் அப்படியே உள்ளது.

கடந்த ஆண்டு பூக்கள் கிடைக்காமல் மக்கள் அலைந்து திரிந்தனர். ஆனால் இந்த ஆண்டு எங்குபார்த்தாலும் வியாபாரிகள் பூக்களை வியாபாரத்துக்காக குவித்து வைத்துள்ளனர்.

ஆனால் பூக்கள் இருந்தும் வியாபாரம் இல்லாமல் இருக்கின்றோம். இந்த பூக்கள் விற்றால்தான் கிராமங்களில் இருந்து கொண்டு வந்து பூக்களைக் கொடுக்கும் வியாபாரிகளுக்கு பணம் தர முடியும். இப்படி வியாபாரம் இருந்தால் இந்த ஆண்டு ஆயுதபூஜை மாதிரியே தெரியவில்லை என வேதனை தெரிவித்தனர்.

Updated On: 14 Oct 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  2. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  3. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  4. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  6. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்
  7. விளையாட்டு
    டி20 இந்திய அணி விக்கெட் கீப்பர் யாரு? சேவாக் யாருக்கு ஆதரவு...
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்கணுமா..? கடன் விபரங்களை தெரிஞ்சுக்கங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண் சக்தியைப் போற்றும் மேற்கோள்கள்
  10. வீடியோ
    தொடங்குகிறது பாதயாத்திரை Part 2 | அதிரவைக்கும் அதிரடி Plan | Annamalai...