/* */

திருப்போரூரில் அதிமுக முதல் செயல்வீரர்கள் கூட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்து, முதல் செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருப்போரூரில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருப்போரூரில் அதிமுக முதல் செயல்வீரர்கள் கூட்டம்
X

 திருப்போரூர் ஒருங்கிணைந்த ஒன்றியம் சார்பில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடந்த செயல்வீரர்கள் கூட்டம்.

செங்கல்பட்டு அதிமுக கிழக்கு மாவட்டம் திருப்போரூர் ஒருங்கிணைந்த ஒன்றியம் சார்பில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் திருப்போரூர் அருகே காலவாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

மதுராந்தகம் எம்எல்ஏ.,வும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலருமான மரகதம் குமரவேல் முன்னிலை வகித்தார். திருப்போரூர் வடக்கு, தெற்கு ஒன்றிய செயலர்கள் குமரவேல், நந்தகுமார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வரவேற்புரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ.,வும் மாநில இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலருமான பரமசிவம் பங்கேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய எம்எல்ஏ பரமசிவம், தமிழக சட்டசபை தேர்தல் தோல்வி அதிமுக., விற்கு உண்மையான தோல்வி இல்லை. அதேபோல் தி.மு.க., வெற்றியும் உண்மை இல்லை. ஏழை எளிய மக்களை ஏமாற்றி பெற்ற பதவி, எத்தனை ஜென்மம் ஆனாலும் அ.தி.மு.க., செய்த திட்டங்கள் மறக்கமுடியாது.

அண்ணன் நத்தம்விஸ்வநாதன் கூறியதுபோல், தி.மு.க.,வையும், மின்வெட்டையும் பிரிக்கமுடியாது, நீட் தேர்வை வைத்து தி.மு.க., அரசியல் செய்தனர். அ.தி.மு.க., ஆட்சியால் 450 கிராமபுற மாணவர்களுக்கு மருத்துவம்படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 பேர் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்வி உள்ளிட்டவைகளுக்கு அ.தி.மு.க., இடஒதுக்கீட்டை சரிசெய்து வழங்கியது. தமிழகத்தில் 11 மருத்துவகல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளம் மூலம் அ.தி.மு.க., செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்லவேண்டும். வெளிமாநிலத்தில் வேலைசெய்வோர் ஓட்டு போட வருவதில்லை. பிரச்சாரத்தின் வேகம் அதிகரிக்க வேண்டும். மக்களோடு மக்களாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.

பாஜகவுடன் கூட்டணி இருப்பதால் இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் ஓட்டு போடவில்லை என்கின்றனர். ஆனால் அவர்களின் நலனுக்காக பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளரை அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்து நிறுத்தினால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என அவர் பேசினார்.

தொடர்ந்து, இளைஞர் இளம் பெண்கள் பாசறைக்கான உறுப்பினர் அடையாள அட்டையினை எம்எல்ஏ வழங்கினர்.

Updated On: 21 July 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  6. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  7. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  8. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  9. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே.என் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்றவர்கள்...