/* */

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இடி தாக்கி இருவா் மருத்துவமனையில் அனுமதி

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இடி தாக்கி ஒடிசா மாநிலத்தை சோ்ந்த இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

வண்டலூா் உயிரியல் பூங்காவில் இடி தாக்கி இருவா் மருத்துவமனையில் அனுமதி
X

வண்ணடலூர் உயிரியல் பூங்கா.

சென்னை புறநகா் பகுதிகளில் நேற்று பிற்பகலிலிருந்து பலத்த இடி,மின்னலுடன் லேசான மழை பெய்து கொண்டிருந்தது.

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஆயுத பூஜை தொடர் விடுமுறை காரணமாக, மழையை கூட பொருட்படுத்தாமல் பாா்வையாளா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் உயிரியல் பூங்காவில் பலத்த மின்னலுடன் இடி தாக்கியது.

அப்போது உயிரியல் பூங்காவில் வங்கப்புலிகளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த 2 பார்வையாளர்கள் மின்னல் இடி தாக்கிய அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனா். அங்கு நின்ற மற்ற பார்வையாளர்களும் அலறிக்கொண்டு கொண்டு ஓடினர். அதைப்போல் விலங்குகளும் நடுநடுங்கிக்கொண்டு நின்றன.

இதையடுத்து உயிரியல் பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து, மயங்கிக்கிடந்த இருவரையும் அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவா்கள் இருவரும் ஒடிசா மாநிலத்தை சோ்ந்த தபாஸ் (24), திலீப் (23) என்று தெரியவந்தது. இருவரும் அம்பத்தூரில் தங்கியிருந்து தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர். ஆயுத பூஜை விடுமுறையால் உயிரியல் பூங்காவிற்கு பார்வையாளர்களாக வந்திருந்தனர்.

ஒடிசா இளைஞா்கள் இருவருக்கும் லேசான காயங்கள் தான்,எனவே பயப்பட எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் வண்டலூா் உயிரியல் பூங்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 Oct 2021 1:30 AM GMT

Related News