/* */

சுதந்திரதின பவளவிழா மராத்தான் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

சுதந்திரதின பவளவிழா மராத்தான் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
X

செங்கல்பட்டில் சுதந்திரதின பவளவிழா மராத்தான் போட்டியை துவக்கிவைத்த ஆட்சியர் ஆ.ராகுல்நாத்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பவள விழாவாக நாடுமுழுவதும் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டில், தமிழக அரசு மற்றும் நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு நாட்டு நலப்பணித்திட்டம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணையம் சார்பில் மராத்தான் போட்டி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற்ற இந்த மராத்தான் போட்டியில், 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டார்.

மாவட்ட ஆட்சியர் ஆ.ராகுல்நாத் போட்டியை தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளை உற்சாகபடுத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொருப்பு) லஷ்மணன், வருவாய் கோட்டாட்சியர் சாஹிதாபர்வீன், செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 11 Sep 2021 9:05 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. நாமக்கல்
    பரமத்தி மசூதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எம்எல்ஏ வாக்கு...
  4. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  5. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  7. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  8. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  9. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  10. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!