/* */

விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு: பிக்பாஸ் இலங்கை ஜனனிக்கு அடித்தது ஜாக்பாட்

Bigg Boss 6 Janany in Thalapathy 67, thalapathy 67 update tamilவிஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பிக்பாஸ் இலங்கை ஜனனிக்கு ஜாக்பாட் அடித்ததாகவே கோலிவுட் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

HIGHLIGHTS

விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு: பிக்பாஸ் இலங்கை ஜனனிக்கு அடித்தது ஜாக்பாட்
X

இலங்கை ஜனனி.

Bigg Boss 6 Janany in Thalapathy 67, thalapathy 67 update tamilஇளைய தளபதி விஜய்யின் 'தளபதி 67' படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைகிறார்கள். ஏற்கனவே மாஸ்டர் என்ற படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை இந்த கூட்டணிக்கு கொடுத்துள்ளதால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Bigg Boss 6 Janany in Thalapathy 67, thalapathy 67 update tamilஇப்படத்தில் திரிஷா, கவுதம் மேனன், மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Bigg Boss 6 Janany in Thalapathy 67, thalapathy 67 update tamilஇந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் சீசன்6 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இலங்கை ஜனனி என்பவரும் நடிக்க உள்ளார். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி சிறந்த பாடகி மட்டும் அல்ல சின்னத்திரை நட்சத்திரமாகவும் ஜொலித்து வருகிறார். மிகவும் நன்றாகவே பிக்பாஸ் வீட்டில் ஜனனி விளையாடி வந்தார். ஆனால் சக போட்டியாளர்களின் மிரட்டல், உருட்டலை சமாளிக்க முடியாமல் வெளியேற்றப்பட்டதாக அவரே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அவரே அளித்த ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.அந்த வகையில் இவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து இருந்தார்.

Bigg Boss 6 Janany in Thalapathy 67, thalapathy 67 update tamilஇந்நிலையில் தான் தற்போது பிக்பாஸ் ஜனனி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 6 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜனனிக்கு முதல் படத்திலேயே இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து இருப்பது மிகப்பெரிய ஜாக்பாட் ஆக கோலிவுட் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

Bigg Boss 6 Janany in Thalapathy 67, thalapathy 67 update tamilதற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 படத்தில் ஜனனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss 6 Janany in Thalapathy 67, thalapathy 67 update tamilஏற்கனவே ஒரு வார காலமே பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தாலும் அதில் வெளியேறியதும் பிரபல யூடியூபர் ஜி.பி. முத்துவிற்கு இந்தி நடிகை சன்னி லியோனுடன் சேர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வரிசையில் தற்போது இலங்கை ஜனனியும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Jan 2023 8:44 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!