/* */

டிஜிட்டல் செய்திகளை கட்டுப்படுத்த விரைவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டம்

டிஜிட்டல் செய்திகளைக் கட்டுப்படுத்த புதிய மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது

HIGHLIGHTS

டிஜிட்டல் செய்திகளை கட்டுப்படுத்த விரைவில் சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டம்
X

இந்தியாவில் டிஜிட்டல் வாயிலான செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய மசோதா அடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் அனைத்தும் முதலில் பதிவு செய்ய வேண்டும். மசோதா அமலுக்கு வந்த 90 நாட்களுக்குள் அனைத்து டிஜிட்டல் ஊடகங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.தற்போது டிஜிட்டல் மூலமான செய்திகளுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஊடகம் சார்ந்த விவ தியது. காரங்களைக் கண்காணிக்கும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்ச கம், அச்சு மற்றும் இதழியல் மசோ தாவில் டிஜிட்டல் ஊடகத்தையும் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

டிஜிட்டல் ஊடகத்தை நடத்து வோர் செய்தி பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்விதம் பதிவு செய் யப்பட்ட நிறுவனம் வெளியிடும் செய்திகளில் விதிகள் மீறப்பட்டால் அவற்றின் மீது நடவடிக்கை அல்லது அவற்றின் லைசென்ஸை ரத்து செய்யும் வகையில் புதியசட்டம் இருக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது. இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரின் தலைமை யில் ஒரு குழுவை அமைக்கலாம் என்றும் தெரிகிறது.

மசோதாவுக்கு பிரதமர் அலுவல கம் ஒப்புதல் தர வேண்டும். இதன் படி டிஜிட்டல் ஊடகங்களும் இனி தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும்.இதற்கு முன்பு தகவல் தொழில் நுட்ப சட்டம் 2019 மூலம் டிஜிட்டல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கை மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது டிஜிட்டல் மூலமாக பரப்பப்படும் எந்த செய்தியும், இன்டர்நெட், கம்ப்யூட்டர் அல்லது மொபைல் நெட்வொர்க் மூல மாக பரப்பப்படும் செய்திகளில் இடம்பெறும் தகவல்கள், வீடியோ காட்சிகள் மற்றும் கிராபிக் காட்சிகள் உள்ளிட்டவை அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.பத்திரிகை, இதழியல் பதிவு குறித்து பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு மாற்றாக இப்பதிய மசோதா இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Updated On: 16 July 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?