/* */

அண்ணாமலையின் அஸ்திரம்; மற்ற அரசியல் கட்சிகளும் கையில் எடுத்தால்...?

BJP Annamalai -இன்று ஒவ்வொரு கட்சியின் ஐ.டி., விங்கும் சில நிமிடங்களில் தங்கள் கட்சியின் செயல்பாட்டை பல கோடிப்பேரிடம் கொண்டு போய் சேர்த்து விடுகின்றனர்.

HIGHLIGHTS

அண்ணாமலையின் அஸ்திரம்; மற்ற அரசியல் கட்சிகளும் கையில் எடுத்தால்...?
X

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை. 

BJP Annamalai -'பிரிண்டிங் மீடியா' மட்டுமே இருந்த கால கட்டத்தில், நிருபர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு அரசியல்வாதிக்கு எதிராகவோ, அதிகாரிக்கு எதிராகவோ 'நிருபர்கள் சந்திப்பு புறக்கணிப்பு' என ஒரு முடிவு எடுத்தால், சம்மந்தப்பட்ட நபர் நடுநடுங்கிப்போவார். அவரது எதிர்காலத்தையே அஸ்தமனமாக்கும் அளவுக்கு, 'பிரிண்டிங் மீடியா'க்கள் வல்லமை பெற்றிருந்த காலமாக அது இருந்தது. குறிப்பாக காமராஜர், அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் 'பிரிண்டிங் மீடியா'க்களே ஆதிக்கம் செலுத்தி வந்தன. சம்பந்தப்பட்ட பத்திரிகையின் நிருபர்கள், தமிழகத்தின் எந்த மூலையில் வேலை பார்த்தாலும், அவருக்கு ராஜமரியாதை கிடைத்தது. நிருபர்களிடம் ஒரு நேர்மையுடன் முழுமையான நம்பகத்தன்மையும் இருந்தது ஒரு முக்கிய காரணம்.

'விஷூவல் மீடியா'க்கள் வந்ததும் செய்தி உலகில், ஒரு புரட்சியே ஏற்பட்டது. நிருபர்கள் இடையே செய்தியை மக்களுக்கு வழங்குவதில், பெரும் போட்டி, போராட்டம் உருவானது. இதனால் நிருபர்கள் மத்தியில் இருந்த ஒற்றுமை தகர்ந்தது. தவிர, 'விஷூவல் மீடியா'க்கள் முழுநேர செய்தி ஒளிப்பரப்பினை தொடங்கிய பின்னர், அரசியல் செய்திகளே அதனை ஆக்கிரமித்தன. தவிர, நிருபர்களுக்கு இடையேயான போட்டியில், நிருபர்களை அவமானப்படுத்தும் நபர்களை புறக்கணிக்க முடியாத நிலை உருவாகிப்போனது. காரணம் செய்தி உலகின் ஹீரோக்களாக அரசியல் பிரமுகர்கள் உருவெடுத்தனர். அவர்களை சார்ந்த வாழ வேண்டிய நிர்பந்தம் பத்திரிகைகளுக்கும், 'விஷூவல் மீடியா'க்களுக்கும் ஏற்பட்டது.

இதன் விளைவு நிருபர்களிடம் மட்டும் பழகி வந்த அரசியல்வாதிகள், பத்திரிக்கை, மற்றும் தொலைக்காட்சி நடத்தும் உரிமையாளர்களிடம் பழகத் தொடங்கினர். அவர்களின் பழக்கம் மற்றும் நெருக்கத்திற்கு ஏற்ப செய்திகளிலும் சில மாற்றங்கள் தென்படத் தொடங்கியது. இதனால் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளின் ஒரு சார்பு தன்மை அதிகரித்தது. செய்திகளின் நம்பகத்தன்மை குறைய தொடங்கியது. நிருபர்களின் செயல்பாடுகள், பத்திரிக்கை மற்றும் 'விஷூவல் மீடியா'க்களின் செயல்பாடுகளின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அற்கேற்ப எந்தெந்த செய்திகள்... எப்படியெல்லாம் வெளியாக வேண்டும் என்ற ஆதிக்கம் உருவாக தொடங்கியது. இந்த ஆதிக்க நிலை, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான், தகவல் தொடர்புத்துறையில் ஏற்பட்ட பெரும் புரட்சியாக அலைபேசிகள் வந்து சேர்ந்தன. சமூக ஊடகங்கள் வந்தன. சமூக ஊடகங்கள் வந்தது தான் தாமதம், மொபைல்போன் வைத்திருக்கும் அத்தனை பேரும் நிருபர்கள்தான் என்ற நிலை உருவாகி விட்டது. 'எங்கு, எந்த சந்தர்ப்பத்தில், என்ன நடந்தது' என்ற தகவல்களை, பொதுமக்களே சமூக ஊடகங்களில் பதிவிட தொடங்கினர். இதன் விளைவு 'பிரிண்டிங் மீடியா'க்களின் மவுசு அதல பாதாளத்திற்கு சரிந்தது. 'விஷூவல் மீடியா'க்களே தடுமாறி விட்டது. பல நேரங்களில், சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை எடுத்து வெளியிடும் நிலைக்கு 'பிரிண்டிங் மீடியா'க்களும், 'விஷூவல் மீடியா'க்களும் வந்து விட்டது.

இப்படி தகவல் தொடர்புத்துறையில் ஏற்பட்ட புரட்சியை அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு செய்தியை சில லட்சம் பேரிடம் கொண்டு போய் சேர்க்கவே பல கோடி ரூபாய் முதலீடு போட்டு அதற்கான கட்டமைப்பினை உருவாக்கி வைத்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. சமூக வலைதளங்கள் வந்த பின்பு, ஒரு பைசா செலவின்றி எந்த தகவலையும், நொடிப்பொழுதில் பல கோடிப்பேரிடம் கொண்டு போய் சேர்க்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. இதற்கு தேவை செய்திகளை உருவாக்கவும், பகிரவும் ஆட்கள் மட்டுமே. இந்த பணிக்கு ஒவ்வொரு கட்சியும் தங்களது சொந்த உறுப்பினர்களையே பயன்படுத்திக் கொண்டு வருகின்றன.

அதுவும் இந்த விஷயத்தில், பா.ஜ., கட்சி அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அதுவும் தமிழகத்தில் அசுரத்தனமான வல்லமை கொண்ட ஐ.டி.,விங்க் பா.ஜ.,விடம் உள்ளது. இதனால் தான் அண்ணாமலை, நிருபர்களிடம், 'நீங்கள் விருப்பம் இருந்தால், எனது செய்திகளை சேகரித்து வெளியிடுங்கள்... இல்லாவிட்டால் புறக்கணித்து விட்டு நடையை கட்டுங்கள்' என பலமுறை வலுவாக கூறி விட்டார். இன்று அண்ணாமலை சொன்னதை நாளை மற்ற தலைவர்கள் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.

காரணம் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல், நிருபர்களை நம்பி அரசியல்வாதிகள் வாழ்ந்த காலம் மலையேறி விட்டது. அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் கெஞ்சும் நிலையில் தான் நிருபர்கள் இன்று உள்ளனர். அதுவும் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், செய்தித்துறை இன்னும் பெரும் பின்னடைவையே சந்திக்கும். இந்த தொழில்நுட்பங்களை அரசியல்கட்சிகள் நேரடியாக பயன்படுத்திக் கொள்வார்கள். இன்று மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களிடம் கூட நிருபர்கள், 'சார், என்னை உங்கள் வாட்சாப் குழுவில் சேர்த்து எனக்கும் பிரஸ்நோட், போட்டோ அனுப்புங்கள் சார்... நாங்களும் உங்கள் செய்தியை வெளியிடுகிறோம்' என்று கேட்க வேண்டிய நிலை தான் உள்ளது. அப்படி அனுப்பும் பி.ஆர்.ஓ.,க்கள் அந்த செய்தி எந்தெந்த பத்திரிக்கையில் வருகிறது என்றும் கண்காணிக்கிறார். செய்தி வெளியாகாத பத்திரிக்கை நிருபர்களுக்கு பி.ஆர்.ஓ., அலுவலகங்களிலேயே கதவு சாத்தப்படுகிறது என்பது தான் கண்கூடான உண்மை.

இந்நிலையில் இத்தனை உண்மைகளையும் அறிந்த அண்ணாமலையிடம் ஒருசில நிருபர்கள் (எல்லா நிருபர்களுக்கும் இந்த செய்தி பொருந்தாது) வம்பு வைத்துக்கொண்டதால் தான் நிருபர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வம்பு வைத்தது ஒருசிலர் என்றாலும், பின்னடைவை சந்தித்தது என்னமோ அத்தனை பேரும் தான். காரணம் அண்ணாமலையின் அஸ்திரத்தை நாளை அத்தனை அரசியல் அமைப்புகளும எடுக்கும் வாய்ப்புகள் நெருங்கிக் கொண்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Nov 2022 10:37 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்