/* */

ஜெயங்கொண்டம் அருகே முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம நடைபெற்றது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்
X

ஜெயங்கொண்டம் கூவத்தூர் சேவை மையத்தில், ஆல் தி சில்ட்ரன் டிரஸ்ட் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேசன் சார்பில்  நடந்த முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம்.    

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கூவத்தூர் சேவை மையத்தில், ஆல் தி சில்ட்ரன் டிரஸ்ட் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேசன் சார்பில் முதியோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பரப்ரம்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கி பேசியதாவது, முதியோர்கள் கொரோனா காலக்கட்டத்தில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. உடல் நலனில் அக்கறை கொண்டு மருத்துவரிடம் உடனே காண்பிக்க வேண்டும்.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்காகவே 24 மணி நேரமும் இலவசமாக இயங்கும் அவசர தொலைபேசி சேவை 1098. குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்களை தடுக்க வேண்டும். பாதுகாப்பும் பராமரிப்பும் அளிக்க வேண்டும் என்று பேசினார்.

முன்னதாக ஆல் தி சில்ட்ரன்ஸ் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் அனைவரையும் வரவேற்றார். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை அரியலூர் சைல்டு லைன் 1098 அணி உறுப்பினர் மாயவேல் வழங்கினார். இறுதியில் கூவத்தூர் பஞ்சாயத்து தலைவர் டேவிட் நன்றி கூறினார்.

Updated On: 21 July 2021 5:49 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!