Begin typing your search above and press return to search.
மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டம்
ஜெயங்கொண்டம் தில்லைநகர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம்.
HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தில்லைநகர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தில்லைநகர் பகுதியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுமக்கள் போராட்டம் காரணமாக 6 மதுக்கடைகள் மூடப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் எந்த ஒரு டாஸ்மாக் கடையும் இல்லை.
தற்போது புதிதாக ஜெயங்கொண்டம் நகரில் தில்லை நகர் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன், பெண்கள், பாமகவினர் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். மதுக் கடைக்கு செல்வதற்காக சாலையில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு சாலைச் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.