/* */

புனித சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

ஜெயங்கொண்டம் அருகே புனித சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

புனித சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி
X

குமிளங்குழி கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள குமிளங்குழி கிராமத்தில் புனித சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரியலூர், தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி ,கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் சில்வர் அண்டா, சேர், குடம் ,வெள்ளி காசு, தங்க நாணயம், பணமுடிப்பு உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பரிசுகள் வழங்கினார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவிதம் ஏதாவது நிகழாமல் இருக்க ஜெயங்கொண்டம் காவல்துறையினர் 200 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இப்போட்டியை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

Updated On: 16 May 2022 10:12 AM GMT

Related News