/* */

ஜெயங்கொண்டம் கொரோனா தடுப்பூசி முகாமினை கண்ணன் எம்.எல்.ஏ. ஆய்வு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமினை கண்ணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் கொரோனா தடுப்பூசி முகாமினை கண்ணன் எம்.எல்.ஏ. ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமினை ஜெயங்கொண்டம் எம்.எல்,ஏ. கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தமிழ்நாடு முதல்வர் அறிவுரையின்படி, 3ம் கட்டமாக கொரோனா வைரஸ் மாபெரும் தடுப்பூசி முகாம் அரியலூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாமில் அதிக அளவிலான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் வீடு,வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகள் மூலம் ஊக்குவிப்பு செய்யப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செயயப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா வைரஸ் பற்றியும் தடுப்பூசி நன்மைகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கி, முகாம் நடைபெறும் இடங்கள், நேரம் உள்ளிட்டவைகள் மூலமாக பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தடுப்பூசியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று ஜெயங்கொண்டம் ஒன்றியம்,கழுவன்தோண்டி கிராமத்தில் நடைபெற்று வரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தடுப்பூசி செலுத்த வருகை தந்த பொதுமக்களிடம் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் பயன்கள் குறித்து அருகிலுள்ள பொதுமக்களுக்கும் தெரிவித்து 100 சதவீதம் கொரோனா செலுத்தப்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன்,ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் உடனிருந்தனர்.

Updated On: 26 Sep 2021 5:43 AM GMT

Related News