பள்ளிக்கூடங்களை அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்க கலெக்டர் உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றுநீர் செல்லும் பகுதிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பள்ளிக்கூடங்களை அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்க கலெக்டர் உத்தரவு
X

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் கொள்ளிடம் ஆற்றுநீர் செல்லும் பகுதிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பி அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவேரியின் உபரிநீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தில் செல்லும் கொள்ளிடம் ஆற்றில் தற்பொழுது காவேரி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. கொள்ளிடம் ஆற்றின் காவேரி நீர் செல்லும் பகுதிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் இந்த ஆய்வில், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், முட்டுவாஞ்சேரி, அரங்கோட்டை மற்றும் அணைக்குடி ஊராட்சி பகுதிகளில் காவேரி நீர் செல்லும் பகுதிகளையும் இம்மழைநீரால் பயிர் சேதங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டு, அலுவலர்களிடம் பல்வேறு விபரங்களை கேட்டறிந்தார்.


அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக்கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு ஏற்கனவே ஒலிப்பெருக்கிகள் மூலம் வெள்ள அபாயம் குறித்து அறிவிப்பு செய்து, தொடர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, குழுக்கள் அமைக்கப்பட்டு மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பாக தங்கவைக்கும் வகையில் பள்ளிக்கூடங்கள் தயார் செய்யப்பட்டு, உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்க மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

தற்பொழுது மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பயிர் சேதம் விபரங்கள் குறித்து மழைநீர் வடிந்த பிறகு உரிய கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அளிக்கவும், மேலும் அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் பயிர் சேதம், கால்நடை சேதம் உள்ளிட்ட ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டால் அது குறித்தும் அலுவலர்கள் கண்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 6 Aug 2022 2:15 PM GMT

Related News