/* */

மாநில தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு ஆட்சியர் ஆர்த்தி பாராட்டு

உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த இளையபெருமாள் மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் குண்டு எறிதல் வட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை ஏற்படுத்தினார்.

HIGHLIGHTS

மாநில தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு ஆட்சியர் ஆர்த்தி பாராட்டு
X

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் உத்திரமேரூர் சேர்ந்த ரா இளையபெருமாள் குண்டு எறிதல் மற்றும் வட்டியெறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை ஒட்டி ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நல்லுறவு அரங்கத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மா ஆர்த்தி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகள் தீர்க்கக்கோரி மனுக்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலரிடம் தெரிவித்னர்.

இதனைத் தொடர்ந்து மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான தடகளப்போட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 25 ஆம் தேதி முதல் துவங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்ற உத்திரமேரூர் வேடபாளையம் பகுதியை சேர்ந்த ஆர் இளையபெருமாள் என்ற மாணவன் குண்டு எறிதல் போட்டியில் 15.62 மீட்டர் எறிந்தும் , வட்டி எறிதல் போட்டியில் 50 மீட்டர் எறிந்தும் இரண்டு போட்டிகளிலும் தங்கம் பெற்று புதிய சாதனை படைத்தார்.

இன்று இவர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து போட்டியில் வென்று சாதனை படைத்தது குறித்து தெரிவித்ததின் பேரில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வாழ்த்து தெரிவித்து மென்மேலும் பல சாதனைகள் புரிய ஊக்குவித்தார்.

அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இணைந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாலின சமத்துவ உறுதிமொழியை ஆட்சியர் ஆர்த்தி வாசிக்க , வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா உள்ளிட்ட அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

நேற்று சென்னை தலைமை செயலகத்தில் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தை வழங்கியதை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனத்தை பார்வையிட்டு , மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்ட மடிக்கணினையும் ஆட்சியர்‌ மா.ஆர்த்தி வழங்கினார்.

விழாக்களை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் குறை தொடர்பான மனுக்களை பெற்று அந்தந்த தொடர்பு அலுவலர்களுக்கு வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினார்.

இன்று காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 240 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக துறை சார்ந்த அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆட்சியர் தலைமையில் அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் நிலுவையில் உள்ள மனுக்களின் நிலை மற்றும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். மேலும் முதலமைச்சர் குறை தீர் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இன்று மனு அளிக்க வந்த பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தரப்பட்ட மனுக்களுக்கு உரிய அத்தாட்சிகளையும் அலுவலர்கள் வழங்கினர்.

அலுவலர்களுக்கு பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு முறையாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு உடனடியாக பதில் தெரிவிக்கவும் அதன் தீர்வுக்கு கால அவகாசம் தேவைப்படும் அதை முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

Updated On: 5 Dec 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  2. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  3. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  6. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  7. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!
  10. ஈரோடு
    மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு