/* */

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அரியலூர் 7401703499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

HIGHLIGHTS

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலும் தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1.00 இலட்சம் வீதம், ரூ.10,000/- மதிப்பிலான தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை வழங்கி விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் விளையாட்டில் சாதனைகள் படைத்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். (இது தவிர விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஒரு நன்கொடையாளர் (ரூ.10 இலட்சத்துக்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்களுக்கு முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது ஒவ்வொரு நிதியாண்டிலும் (ஏப்ரல் 1 முதல் மார்ச்.31 முடிய) வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மேற்கண்ட விருதிற்கு ரூ.10,000/-க்கு மிகாமல் ஒரு தங்கப்பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு விருது வழங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின்படி 2021-2022 ஆண்டிற்கான காலம் (1.4.2018 முதல் 31.3.2021 வரை) முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் விருது தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் / வீராங்கணைகள் / பயிற்றுநர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் / உடற்கல்வி ஆசிரியர்கள் / விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம் / ஒரு நன்கொடையாளர் / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோரிடமிருந்து வரவேற்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக வசித்துவரும், தமிழ்நாட்டிற்காக இரண்டு முறை தமிழ்நாடு அணியின் சார்பாக கலந்துகொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர். இந்தியாவின் சார்பாக கலந்துகொண்ட தமிழ்நாட்டில் பணியின் நிமித்தம் குறைந்தது 5 ஆண்டுகளாக வசித்து வரும் முப்படை, ரயில்வே, காவல், அஞ்சல் மற்றம் தொலை தொடர்புத்துறை மற்றும் இதர துறைகளில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். இரண்டாவது முறையாக ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படமாட்டாது. ஒருவர் காலமாகும்பட்சத்திலும் இவ்விருது வழங்கப்படும். விருதிற்கு முந்தைய 3 ஆண்டுகளில் விளையாட்டில் பெற்ற சிறந்த வெற்றிகளை இவ்விருதிற்காக கருத்தில் கொள்ளப்படும். உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள் / வீராங்கணைகள் தங்களின் விளையாட்டு சான்றிதழ்களை சான்றொப்பத்துடன் இணைத்தல் வேண்டும்.

ஓலிம்பிக் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் ஆசிய விளையாட்டுப்போட்டிகள் சர்வதேச ஒலிம்பிக் குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் உலக வாகையர் போட்டிகள், (4 ஆண்டுக்கு ஒரு முறை, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டுதோறும்), சர்வதேச ஒலிம்பிக்குழு அங்கீகாரத்துடன் சர்வதேச விளையாட்டு இணையத்தால் நடத்தப்படும் காமன்வெல்த் வாகையர் போட்டிகள் (4 ஆண்டுக்கு ஒரு முறை, இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மற்றும் ஆண்டுதோறும்), தெற்காசிய விளையாட்டுப்போட்டிகள், தேசீய விளையாட்டுப்போட்டிகள், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையினரால் அங்கீகரிக்கப்பட்ட தேசீய விளையாட்டு இணையம் நடத்தும் தேசீய வாகையர் போட்டிகள், அழைப்புப்போட்டிகள் மற்றும் மண்டலங்களுக்கு இடையேயான போட்டிகள் கருத்தில் கொள்ளக்கூடாது.

முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கான விண்ணப்பங்கள் விருது ஆண்டுக்கு முந்தைய மூன்று ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து சாதனைகள் படைத்த தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் பதக்கமும் அதாவது உலகக்கோப்பை தெற்காசிய விளையாட்டுப்போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளின் விளையாட்டுப்போட்டிகள் (SAARC) அங்கீகரிக்கப்பட்ட சம்மந்தப்பட்ட விளையாட்டு இணையங்களினால் நடத்தப்படும் தேசீய விளையாட்டுப்போட்டிகள் மற்றும் தேசீய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்றிருத்தல் வேண்டும். போட்டிகளில் பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும்.

2021-2022 ஆண்டிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளான (1.4.2018 முதல் 31.3.2021 வரை) பெற்ற வெற்றிகள் கருத்தில் கொள்ளப்படும். தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களிலும் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடமும் பெற்று இருத்தல் வேண்டும். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளின் சாதனைகள் கருத்தில் கொள்ளப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டுக்கழகம் / மாவட்ட விளையாட்டு அலுவலர் / முதன்மை கல்வி அலுவலர் / முதன்மை உடற்கல்வி அலுவலர்( ஆடவர் / மகளிர்) மூலமாகவும் விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஓர் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றம் ஒரு நன்கொடையாளர் (ரூ.10 இலட்சத்திற்கும் அதிகமாகநன்கொடை அளித்தவர்) / ஒரு ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்கள் உரிய வழிமுறையாகவும் விண்ணப்பங்கள் உறுப்பினர் செயலர் அவர்களுக்கு வந்துசேரும்படி அனுப்பவேண்டும்.

விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கணைகளுக்கு மற்றும் விளையாட்டுப்போட்டிகளை நடத்தும் ஒரு நடத்துநர் / ஒரு நிர்வாகி / ஓர் ஆதரவளிக்கும் நிறுவனம் மற்றும் ஓர் நன்கொடையாளர் (ரூ.10 இலட்சத்திற்கும் அதிகமாக நன்கொடை அளித்தவர்) / ஓர் ஆட்ட நடுவர் / நடுவர் / நீதிபதி ஆகியோர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பப்படிவம் மற்றம் விரிவான விதிமுறைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையத்தளத்தினின்றும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதிற்கான விண்ணப்பம் என்று எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமையகத்திற்கு (முகவரி. உறுப்பினர்செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், பெரிய மேடு, சென்னை-600003) 10.06.2022-ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அரியலூர் அவர்களை 7401703499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 26 May 2022 12:37 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் அவதி
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி : 2ம் நாளான நேற்று ஆயிரக்கணக்கில்...
  4. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  5. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  6. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  7. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  8. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  9. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  10. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்