/* */

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரியார்கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூகசீர்திருத்தக் கருத்துகள், சிறுகுறிப்பு, ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

HIGHLIGHTS

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
X

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான பரிந்துரைகளுடன் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்ட தகவல்: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995 -ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.1,00,000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளரை தமிழக முதலமைச்சர் தேர்வு செய்கிறார்.

2021 -ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

தங்களது விண்ணப்பம் தங்களின் பெயர், பிறந்த இடம் மற்றும் நாள், தாய் தந்தை மற்றும் குடும்ப விவரம், தற்போதைய முகவரி (தொலைபேசி எண்ணுடன்), கல்வி தகுதி, இனம் மற்றும் ஜாதி, தொழில், சமூக நீதிக்காக பாடுபட்ட விவரம், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்தக் கொள்கை குறித்து சிறு குறிப்பு, கலை இலக்கியம் சமூக பணி ஆகியவற்றில் உள்ள ஈடுபாடு குறித்து சிறு குறிப்பு மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2021 -ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2021 ஆகும். மேற்படி தகுதியுடைய நபர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Updated On: 1 Sep 2021 10:13 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  3. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?
  5. இந்தியா
    கடற்படையின் அடுத்த தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான இளநீர் பாயாசம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    சந்தன மரம் வளர்க்கலாமா? அதற்கான விதிகள் என்ன?
  8. அரசியல்
    உங்க பாட்டியே எங்களை சிறையில் அடைத்தபோதும் பயப்படவில்லை! ராகுலுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    மருமகள் என்பவர் இன்னொரு மகளாக இருக்கமுடியுமா?
  10. தமிழ்நாடு
    தமிழக மக்களவைத் தேர்தல்: தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம்