/* */

அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு தொழில் நெறி வழி காட்டல் கண்காட்சி

அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு தொழில் நெறி வழிகாட்டல் கண்காட்சியை தொடங்கி வைத்து கலெக்டர் ரமண சரஸ்வதி பேசினார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு  தொழில் நெறி வழி காட்டல் கண்காட்சி
X

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் நெறி வழிக்காட்டல் கண்காட்சியை  கலெக்டர் ரமண சரஸ்வதி  தொடங்கி வைத்து  பேசினார்.


அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிக்காட்டல் மையம் மற்றும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய தொழில் நெறி வழிக்காட்டல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று (12.10.2021) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அப்போது கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பேசியதாவது:-

கல்லூரி கல்வியின் இறுதி நிலையில் இருக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் வாழ்க்கை கனவுகளை தொடங்குவதற்கான பாதையை தேர்ந்தெடுக்கும் நிலையில் உள்ளீர்கள். அதன் அடிப்படையில், தங்கள் கனவுகளை நினைவாக்குவதற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து தெரிந்துகொள்வதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிக்காட்டல் மையம் மற்றும் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய தொழில் நெறி வழிக்காட்டல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலமாக அரசு மற்றும் தனியார் துறைகளிலுள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் அதனை பெறுவதற்கான பயிற்சிகள் குறித்தும், தொழில் முனைவோர்களாக நினைக்கும் மாணவ, மாணவிகளுக்கு தொழில் மையத்தின் சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக வங்கிகளில் செயல்படுத்தப்படும் கடனுதவிகள் குறித்தும் துறை வல்லுநர்களால் எடுத்துரைக்கப்பட உள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் அனைவரும் துறை சார்ந்த வல்லுநர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களை கேட்;டறிந்து, தங்கள் வாழ்க்கைக்கான முதல் படியை சிறப்பான முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும்/

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், முப்படைகளில் வேலைவாய்ப்புகள் குறித்து முன்னாள் படைவீரர் நலத்துறை துணை இயக்குநர், வங்கி கடனுதவி மற்றும் சுயதொழில் குறித்து மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்,திறன் பயிற்சி அவசியம் குறித்து ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர், தனியார் துறையில் பணியமர்த்துதல் குறித்து கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர், போட்டித்தேர்வினை மேற்கொள்வது குறித்தும், சுயதொழிலின் முக்கியத்துவம் குறித்தும் தனியார் துறை அலுவலர்களும் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினர்.

புத்தக கண்காட்சியை கலெக்டர் ரமண சரஸ்வதி பார்வையிட்டார்.

முன்னதாக, போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்களின் வசதிகளுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் போட்டித்தேர்வுகள் குறித்த புத்தகக் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

மேலும், 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தொழில் நெறி வழிக்காட்டல் தொடர்பாக நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பரிசுகளை வழங்கி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் தகவல் கையேட்டியினை வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணை இயக்குநர் மு.சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கு.ரமேஷ், துணை இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) லெப்.கமாண்டர்.தி.சங்கீதா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஆ.லெட்சுமி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ஆ.துரைராஜ், கல்லூரி முதல்வர் தமிழரசி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் திரு.மூ.வினோத்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 12 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?