/* */

மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒத்திவைப்பு

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒத்திவைப்பு
X

இது தொடர்பாக, அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்கவும், மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வியாழக்கிழமைகளில் அனைத்து மருத்துவர்கள் கொண்டு நடைப்பெற்று வந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கிடும் முகாம், ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை விதமாக தொற்று குறையும் வரை அடையாள அட்டை வழங்கும் முகாம் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அரசு விதிமுறைகளை பின்பற்றி நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் முகக்கவசம் அணிந்து தங்களை தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Jan 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?