/* */

கல்வி உதவித்தொகை வருமான உச்ச வரம்பினை ரூ.2,50,000/-ஆக உயர்த்தி ஆணை

கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2,50,000/-ஆக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கல்வி உதவித்தொகை வருமான உச்ச வரம்பினை ரூ.2,50,000/-ஆக உயர்த்தி ஆணை
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2021-22 ஆம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2,00,000/-லிருந்து ரூ.2,50,000/-ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் 2021-2022 ஆம் ஆண்டிற்கான முதுகலை (எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்ஸி., எம்.பில்., எம்.பி.ஏ., பிஎச்டி.,) பாலிடெக்னிக் (டிப்ளமோ- மூன்றாண்டு பட்டயப்படிப்பு), தொழிற்படிப்பு (மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் போன்ற பிரிவுகளுக்கும், வேளாண்மை, பொறியியல், சட்டம்) போன்ற படிப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்கள் புதியது விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக மின்னஞ்சல் முகவரி dir-bcmw@nic.in மற்றும் தொலைபேசி எண் 044-29515942 மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தை அணுகலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 7 Dec 2021 8:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  2. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  3. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  4. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  5. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  6. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  7. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  8. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  9. குமாரபாளையம்
    FDP AI இயங்கும் ஆராய்ச்சி தொகுதி 3 - நிரல் விவரங்கள்:
  10. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!