/* */

புதை உயிரி படிவ அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

Museum in Tamil - புதை உயிரி படிவ அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்றுகளை அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி மகாலெட்சுமி, கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆகியோர் நட்டு வைத்தனர்.

HIGHLIGHTS

புதை உயிரி படிவ அருங்காட்சியக வளாகத்தில்  மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
X

வாரணவாசி கிராமத்தில்  புதை உயிரிப்படிவ அருங்காட்சியக வளாகத்தில்  மரக்கன்றுகள் அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.மகாலெட்சுமி, கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி ஆகியோர் நட்டு வைத்தனர்


Museum in Tamil -அரியலூர் மாவட்டம், தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் ஏராளமான கனிம வளங்கள் இருப்பதோடு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக கடலாக இருந்ததாகவும், மண் முகடுகளில் படிவங்கள் அரிய வகை கற்படிவங்கள் மூலமாக கடலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளது. இங்கு கிடைக்கும் புதை உயிரினப் படிவங்களை அருங்காட்சியமாக வாரணவாசி ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் மரக்கன்றுகள் மற்றும் பழமரக்கன்றுகள் என நாவல், புங்கன் மற்றும் சரக்கொன்றை மரங்களை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் ரூ.27,000/- மதிப்பில் 50 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.மகாலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி ஆகியோர் நட்டு வைத்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கர்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) ஆனந்தன், அருங்காட்சிய காப்பாளர் சிவக்குமார், வாரணவாசி ஊராட்சி மன்றத்தலைவர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 17 Aug 2022 9:10 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!