/* */

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்ய வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2022-2023 ஆம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான ஓர் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ரூ.1000/-, 6-ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3000/-, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.4000/-, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4000/-, இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6000/-, முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7000/- வழங்கப்படுகிறது. மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3000/- மற்றும் இளங்கலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.5000/- மற்றும் முதுகலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.6000/- வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2022-2023 அம் நிதியாண்டு கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியர்கள் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பெற்றுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவ மாணவியர் பிற துறைகளில் கல்வி உதவித்தொகை பெற வில்லை என தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் சான்றிதழ், மாணவ, மாணவியர்களின் வங்கி கணக்கு புத்தக நகல், முகம் மட்டும் தெரியும்படியான தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 17, தரைத்தளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மேற்காணும் சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 22 Jun 2022 8:08 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?