Begin typing your search above and press return to search.
அரியலூர் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் கொட்டித் தீர்க்கும் மழை
அரியலூர், ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் மீன்சுருட்டி உடையார்பாளையம் தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது
HIGHLIGHTS

மழை ( கோப்பு படம் )
அரியலூர் மாவட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் அதை சுற்றியுள்ள ஆண்டிமடம் மீசுருட்டி உடையார்பாளையம் தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கடலை மற்றும் நெல் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். கார்த்திகை மாதத்தில் கடலை விதைப்பு செய்ய வேண்டிய நிலையில், தொடர் மழையின் காரணமாக தற்போது விவசாயிகள் தாமதமாக கடலை விதைப்பு செய்தனர்.
இருப்பினும் தற்போது பெய்த வரும் மழையால் கடலைகள் அழுகி முளைப்புத் திறன் அற்றுப் போய் விடும் என்ற அச்சத்தில் கடலை விவசாயிகள் உள்ளனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில் நெற்பயிர்கள் கதிர் விடும் நிலையில் உள்ளது. ஆகையால் இநத் மழையில் அடிபட்டு பதர்ஆ கி போய்விடும் என்ற அச்சத்தில் நெல் விவசாயிகள் உள்ளனர்.