/* */

பஞ்சாப் விவகாரம்: காங்கிரஸ் கட்சியினர் அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு

பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவம் குறித்து தமிழக ஆளுநருக்கு அரியலூர் காங்கிரஸ் கட்சியினர் மனு

HIGHLIGHTS

பஞ்சாப் விவகாரம்: காங்கிரஸ் கட்சியினர் அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு
X

பஞ்சாப் விவகாரம் குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி வாயிலாக தமிழக ஆளுநருக்கு  காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.

பிரதமர் மோடி பஞ்சாப் பயணத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவம் குறித்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி வாயிலாக தமிழக ஆளுநருக்கு அரியலூர் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்தனர்.

அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் ஏ.சங்கர், நகர தலைவர் எஸ்.எம். சந்திரசேகர், செய்தித் தொடர்பாளர் மா.மு.சிவகுமார், மகளிர் அணித் தலைவர் மாரியம்மாள், வட்டாரத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்துசாமி,சரவணன், வேல்முருகன்,பாலு, ஜெயங்கொண்டம் நகரத் தலைவர் மணிகண்டன், நிர்வாகி கங்காதுரை உட்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆட்சியரை சந்தித்து அளித்த மனு:

பிரதமரின் பஞ்சாப் பயணம், ஏற்கெனவே திட்டமிட்ட நாடகமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருகிறது. தலைநகர் தில்லியில் ஓராண்டு காலம் போராடிய விவசாயிகளை ஒரு நிமிடம் சந்தித்து பேச மறுத்த பிரதமர் மோடி மீது, பஞ்சாப் விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பான மனநிலை இருந்து வருகிறது. இந்நிலையில், பிரதமரின் பஞ்சாப் பயணம் சாலை மார்க்கத்துக்கு எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் எப்படி அனுமதி அளித்துள்ளனர் என்று சந்தேகம் ஏற்படுத்திருக்கிறது.120 கி.மீ தூரம் சாலை வழியாக பிரதமர் பயணம் செய்வதை எஸ்.பி.ஜி அனுமதித்திருக்கக் கூடாது.

பிரதமரின் பஞ்சாப் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் விவசாயிகள் போராட்டம் அல்ல. அதற்கு மாறாக பிரதமரின் பொதுக் கூட்டத்துக்கு 70,000 நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பிரதமரின் வருகைக்கு ஒரு மணி நேரம் முன்னதாக 500 நாற்காலிகளில் தான் மக்கள் அமர்ந்திருந்தனர். மீதி நாற்காலிகள் காலியாக இருந்த செய்தி அறிந்த பிறகு பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதை மூடி மறைக்கவே பாஜகவினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கபடநாடகம் நடத்துகிறார்கள். எனவே, பிரதமரின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில காங்கிரஸ் அரசை கலைப்பதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. எனவே, இது போன்ற பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்