/* */

அரியலூர் அருகே கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

அரியலூர் அருகே மேலப்பழுவூரில் உள்ள கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் அதனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அரியலூர் அருகே கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
X

மேலப்பழுவூர் கிராமத்தில் கல்குவாரியை மூடவேண்டும் என வலியுறுத்தி பொது மக்கள் அதனை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூர் கிராமத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்‌ஷுக்கு 42 ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடத்தில் செயல்படும் கல்குவாரியில், பூமிக்கடியில் இருக்கும் கருங்கல்லை வெடி வைத்து தகர்த்து, ஜல்லி ஆக்கும் பணி நடைபெறுகிறது. புதிதாக அமைக்கப்படும் திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு இந்த ஜல்லிகற்கள் இங்கிருந்து அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பூமிக்கடியில் வெடி வைத்து கருங்கல்லை உடைக்கும்போது ஏற்படும் நில அதிர்வுகளால் பெரிதும் கிராமத்தில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், வீடுகளில் அதிர்வுகள் உண்டாவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனையடுத்து இந்த கல்குவாரியை மூடவேண்டும் என வலியுறுத்தி பொது மக்கள் கல்குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மக்களை சமாதனப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில், மக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 7 Oct 2021 7:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!