/* */

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 லட்சம் நிதியுதவி

அரியலூர் மாவட்டத்தில் பணியின்போது உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு காக்கி உதவும் கரங்கள் சார்பில் ரூபாய் 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 லட்சம் நிதியுதவி
X
அரியலூர் மாவட்டத்தில் பணியின் போது உயிரிழந்த போலீசாரின் குடும்பத்துக்கு காக்கி உதவும் கரம் அமைப்பின் மூலம் ரூ 20 லட்சம் நிதியுதவியை மாவட்ட போலீஸ் எஸ்.பி. வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த முதல் நிலை காவலர் மகாலிங்கம் 27.04.2021 அன்று புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இறப்பில் வாடும் அவரின் குடும்பத்தினருக்கு உதவி செய்ய அவருடன் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்த காவலர்கள் ஒன்றிணைந்து காக்கி உதவும் கரங்கள் சார்பாக ரூபாய் 20 லட்சம் நிதி திரட்டினர். அந்தப் பணத்தை நிரந்தர வைப்பு தொகையாக காவலரின் குடும்பத்தினர் பெயரில் வங்கியில் போடப்பட்டது.

திரட்டப்பட்ட ரூ 20 லட்சம் நிதியின் நிரந்தர வைப்புத் தொகை ரசீது மற்றும் 7,500 ரூபாய் ரொக்கப் பணத்தையும் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ் கான் அப்துல்லா காவலர் மகாலிங்கத்தின் பெற்றோர்கள் வரதராஜன் - தமயந்திக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது அவருடன் பணியாற்றிய 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து காவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 23 Jun 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 11 மணி நிலவரப்படி 26% வாக்குகள்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  5. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  6. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  7. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  8. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  9. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?