ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை அரியலூர் கலெக்டர் ஆய்வு

ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை அரியலூர் கலெக்டர் ஆய்வு
X

ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்தார்.


அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி விடுதி ஆகிய இடங்களில் கொரோனா (ஒமிக்ரான்) வைரஸ் குறித்த முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துதுறையினரால் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் கொரோனா தாக்கத்திலிருந்து மக்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

அதேபோல் நோய்த்தொற்று பரவல் இருந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சைகள் அளிக்க ஏதுவாக பல்வேறு புதிய படுக்கை வசதிகள் மற்றும் கோவிட் கேர் மையங்கள் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டாம் நிலையில் உயிரிழப்பு ஏற்படாமலும் தற்போது மாவட்டத்தில் நாளொன்றுக்கு ஓரிரு நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், நோய் தடுப்பு முயற்சியாக தடுப்பூசி பணியும் முழுவீச்சில் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 10 படுக்கை வசதிகளையும், புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் 100 புதிய படுக்கை வசதிகளையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மேலும், நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவறை வசதி, படுக்கை வசதி ஆகியவை முறையாக செய்யப்பட்டுள்ளதா என பார்வையிட்டு, தேவையான அளவு ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதா எனவும் மருத்துவமனை நிர்வாகத்திடம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துகிருஷ்ணன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி உடனிருந்தனர்.


Updated On: 7 Dec 2021 5:10 AM GMT

Related News