/* */

6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து சிறப்பு மருத்துவ முகாம்

6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தினை உறுதிசெய்யும் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட கலெக்டதலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து சிறப்பு மருத்துவ முகாம்
X

அரியலூர் மாவட்டத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.


அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் தேசிய குழந்தை நலத்திட்டம் இணைந்து நடத்திய 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தினை உறுதிசெய்யும் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (23.05.2022) நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் 110-விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்பில் 6-வயதிற்குட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டம் ஒன்று ஏற்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் பொதுசுகாதாரத்துறையும் ஒருங்கிணைந்து 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இம்முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில், 38 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மருத்துவ உதவித்தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து உதவித்தேவைப்படும் குழந்தைகளை தனித்தனியாக கண்டறிந்து குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நீக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 வட்டாரத்தில் மிதமான மற்றும் கடுமையான எடை குறைவு உள்ள 18,682 குழந்தைகள் உள்ளனர். மேலும் இம்மருத்துவ முகாம் ஒரு மாதம் நடைபெற உள்ளதுடன். முதல் 3 வாரம் தொடர் பரிசோதனைகளும், 4வது வாரத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு பரிசோதனையும் செய்யப்படவுள்ளது. ஒரு வட்டாரத்திற்கு 20 வீதம் மருத்துவர் அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். எனவே, இம்முகாமை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகளை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இம்முகாமில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்;திட்ட அலுவலர் க.அன்பரசி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) கீதாராணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 23 May 2022 1:57 PM GMT

Related News