/* */

26-ம் தேதி அரியலூர் மாவட்ட நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்

26-ம் தேதி அரியலூர் மாவட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

26-ம் தேதி அரியலூர் மாவட்ட நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்
X

பைல் படம்.

அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் என்.அழகேசன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தேசிய மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உச்ச நீதிமன்றம், உயர்நீதி மன்றம் வழிகாட்டுதலின்படியும் 26.06.2022 அன்று அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்ற வளாகத்திலும் மற்றும் செந்துறை நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற இருக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தேசிய மக்கள் நீதிமன்றம் உதவி புரியும்.

அன்றைய தினம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் பேசி தீர்வு காணப்படவுள்ளது. அந்த வகையில் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்கமான நீதிமன்ற நடைமுறைகள் இன்றி விரைந்து முடிக்கலாம்.

மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது. மக்கள் நீதிமன்ற உத்தரவு இறுதியானது. கடுமையான நடைமுறைகள் இன்றி ஏழை, எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க உதவி புரிகிறது. வழக்காடிகள் செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளவும் வழி உள்ளது. அதனால் கட்டணமில்லா விரைவான நீதி, இருதரப்பினரின் விருப்பத்திற்கிணங்க தீர்வு பெற முடியும் என்பதால் இந்த வாய்ப்பினை மக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வு அரியலூர் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான எஸ்.மகாலட்சுமி தலைமையில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் மற்றும் அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் முன்னிலையில் நடைபெறும். எனவே, வழக்காடிகளும் பொது மக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் என்.அழகேசன் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Jun 2022 9:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!