/* */

முழு ஊரடங்கால் அரியலூர் மாவட்டத்தில் 16-ம் தேதி போட்டிகள் நடத்த தடை

அரியலூர் மாவட்டத்தில் 16.01.2022 அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முழு ஊரடங்கால் அரியலூர் மாவட்டத்தில் 16-ம் தேதி போட்டிகள் நடத்த தடை
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி.

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாசற்ற தூய்மையான பொங்கலை கொண்டாடும் வகையில் உரிய வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தெரிவித்துள்ளபடி, பொதுமக்கள் போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் போன்றவைகளை எரிக்கக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும்.

மேலும், வருகின்ற 16.01.2022 அன்று தமிழக அரசின் சார்பில் தமிழகத்தில் முழு ஊடரங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 16.01.2022 அன்று காணும் பொங்கல் என்பதால் அன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் வழக்கம் உள்ளது. எனவே, அன்றைய தினம் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளை சம்மந்தப்பட்டவர்கள் 15.01.2022 அல்லது 17.01.2022, 18.01.2022 உள்ளிட்ட வேறு ஏதேனும் நாட்களில் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்திக்கொள்ளலாம்.

தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி, அரங்குகளில் நடத்தப்படும் கூட்டங்களில் 50 சதவீத நபர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தை பொருத்தவரையில் கோவிட் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி சுமார் 86 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசியையும் பொதுமக்களுக்கு முழுமையாக செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இரண்டாம் தவணை தடுப்பூசியையும் விடுப்பட்ட அனைவரும் முழுமையாக செலுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், 16.01.2022 அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அரியலூர் மாவட்டத்தில் எந்த விதமானப் போட்டிகளும் நடத்த அனுமதி இல்லை. மற்ற நாட்களில் நடத்தப்படும் போட்டிகளுக்கு கடந்த ஆண்டை போலவே காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட துறைகளில் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி உரிய அனுமதிப் பெற்று போட்டிகள் நடத்துவதுடன், சுகாதாரத்துறையில் கலந்து ஆலோசித்தும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். மேற்கண்ட துறைகள் மூலம் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றி பொது இடங்களில் எந்தவொரு நிகழ்வுகளும் நடைபெறுவது உறுதி செய்யப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றார்.

Updated On: 14 Jan 2022 8:32 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!