/* */

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்

அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்.

HIGHLIGHTS

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீர்மானம்
X

அரியலூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டக் குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் வாலண்டினா, சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மகாராஜன், பரமசிவம், வெங்கடாசலம், கந்தசாமி, கிருஷ்ணன், துரை.அருணன், அம்பிகா மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தின் தலைநகராக இருப்பதால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட வேண்டும். தற்போது செயல்படும் நீதிமன்றங்கள் தனித்தனியாக செயல்படுவதால் வழக்குகள் சம்பந்தமாக வரக்கூடிய பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என அனைவரும் தூரம் இருப்பதால் அலைக்கழிக்கப்பட்டு மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் போதுமான சுகாதார அடிப்படை வசதி கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. இதனால் பெரும்பாலான வழக்குகள் முடிக்க முடியாமல் கால தாமதமாகி நிலுவையில் இருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டிடங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றது. அதேபோல் மாவட்ட தலைநகரான அரியலூரில் ஒரே இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரால் அரியலூர் மாவட்டத்தில் கங்கவடங்கநல்லூர், அரியலூரில் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள வீடுகள் இடித்து அப்புறப்படுத்தபட்டுள்ளது. ஜெயங்கொண்டம் குருவாலப்பர் கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கரணை, கரைமேடு, அயப்பநாயக்கன்பேட்டை ஊராட்சி தர்மசமுத்திரம் அதேபோல் ஆண்டிமடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் என்ற பெயரால் வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவதற்கு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே மேற்கண்ட பகுதிகளில் இடித்த வீடுகளுக்கு மறு குடியமர்த்த இடமும், இடித்து அப்புறப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு உரிய நஷ்ட ஈடும், குடியிருப்பு இடத்திற்கு குடி மனைப்பட்டாவும் வழங்க வேண்டுமென கடந்த மே 6 தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் முழுவதும் வீடுகள் இல்லாத மக்களுக்கு கணக்கெடுப்பு செய்து அவர்வர்கள் குடியிருக்கும் இடங்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரை இந்தக் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் மணல் மாட்டு வண்டிகளுக்கு குவாரி அமைக்க கோரி பலமுறை போராட்டம் நடத்தப்பட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இதுநாள்வரை குவாரி தொடங்கப்படவில்லை. தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் உட்பட பல இடங்களில் மாட்டு வண்டி குவாரிகள் இயங்கி வருகிறது. அரியலூர் மாவட்டத்தை தமிழக அரசு வஞ்சிக்கிறது. எனவே மாட்டுவண்டி தொழிலாளர்களின் குடும்பங்களை பாதுகாக்கும் வகையில் உடனடியாக திருமானூர், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளிலும், செந்துறை வெள்ளாற்று பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் மாட்டுவண்டி மணல் குவாரி அமைக்க வேண்டும் என கூட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Updated On: 13 May 2022 3:02 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?