/* */

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைப்பு

அரியலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைப்பு
X

அரியலூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார்.


அரியலூரில் மாவட்டம், தா.பழூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று (02.07.2022) துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து, முன்கூட்டியே 24.05.2022 அன்று தண்ணீரை திறந்து விட்டுள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்கான குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 4,875 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் தா.பழூர் வட்டார விவசாயிகளுக்கு இடுபொருட்களான இரசாயன உரங்கள், நெல் விதைகள் மற்றும் மாற்றுப் பயிர் சாகுபடிக்கான இடுபொருட்கள் வழங்கப்பட்டு, குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைக்கப்பட்டது.

மேலும், இன்றைய நிகழ்வில் கூட்டுறவுத் துறையின் சார்பில் 203 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் பயிர் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளும், வேளாண் துறையின் சார்பில் குறுவை தொகுப்புத் திட்டத்தின்கீழ் 14 பயனாளிகளுக்கு தலா ரூ.2466/- என மொத்தம் ரூ.34524/- மதிப்பீட்டில் உரத்தொகுப்புகளும், 2 பயனாளிகளுக்கு ரூ.8,000/- மதிப்பீட்டில் நிலக்கடலை தொகுப்புகளும், 2 பயனாளிகளுக்கு ரூ.1620/- மதிப்பீட்டில் மக்காச்சோளம் தொகுப்புகளும், 4 பயனாளிகளுக்கு ரூ.5000/- மதிப்பீட்டில் உளுந்து தொகுப்புகளும், நபார்டு திட்டத்தின் கீழ் குணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் உழவு இயந்திரத்தையும், 5 விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகளும் மாவட்ட கலெக்டரால் வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டம் 2 வட்டாரங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.2466/- மதிப்பில் யூரியா 45 கிலோ, டிஏபி 50 கிலோ, பொட்டாஷ் 25 கிலோ என அதிக பட்சமாக ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் உரங்கள் வழங்கப்படுவதுடன், 100 சதவீதம் மானியத்தில் உரங்கள் வழங்கப்படும். மேலும், விவசாயிகள் நெல்லுக்கு மாற்றுப் பயிரான சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் ஆகிய மாற்றுப் பயிர் சாகுபடி செய்யவும் முன்வர வேண்டும். மேலும், அரியலூர் மாவட்டத்திலுள்ள புள்ளம்பாடி வாய்க்காலினை முன்கூட்டியே திறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரித் திட்டத்திற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நிலங்களை மீண்டும் பொதுமக்களிடமே திருப்பி ஒப்படைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருவதுடன், இனிவரும் காலங்களில் படிப்படியாக பொதுமக்களுக்கு நிலங்களை திருப்பி கொடுக்கும் நிகழ்வு நடைபெறும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பேசினார்.

இந்நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தீபாசங்கரி, அட்மா திட்டத் தலைவர் சௌந்தர்ராஜன், கூட்டுறவு சங்கத் தலைவர் குமார், ஊராட்சி மன்றத்தலைவர் கதிர்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 2 July 2022 1:58 PM GMT

Related News