/* */

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை : கைதான நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்

HIGHLIGHTS

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை : கைதான நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
X

 உயர்நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இக்கொலைக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார் கோவில் கிராமத்தில் கடந்த 2020 -ஆம் ஆண்டு செல்வமணி, சாமிநாதன் உள்ளிட்ட சிலர் மது அருந்தியதில் ஏற்பட்ட தகராறில் சாமிநாதன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து செல்வமணியை வெட்டி கொலை செய்தனர். இதனையடுத்து உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்த சாமிநாதன் சொந்த கிராமத்திற்கு வராமல் சென்னையிலேயே தங்கி இருந்தாராம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது தங்கையின் திருமணத்திற்காக சொந்த கிராமமான அனைக்குடம் கிராமத்திற்கு வந்துள்ளார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொலை செய்யப்பட்ட செல்வமணியின் தம்பி இளையராஜா உள்ளிட்ட சிலர் கூலிப்படையை வைத்து கடை வீதியிலேயே சாமிநாதனை வெட்டி படுகொலை செய்தனர். இக்கொலை குறித்து தா.பழூவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இக்கொலையில் தொடர்புடைய தஞ்சை மாவட்டம், திருநறையூர் கிராமத்தை சேர்ந்த குருமூர்த்தி, விஜய், நாச்சியார் கோவில் கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார், தமீம் அன்சாரி, கரண், தினேஷ்குமார், ஆகியோர் திருவையாறு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில் இக்கொலையில் முக்கிய குற்றவாளியான இளையராஜாவின் மனைவி ரெஜினா, செல்வகுமார், செல்வம், நவீன் குமார் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை செய்தனர்.

அப்பொழுது சதி திட்டத்திற்கு உடந்தையாக இருந்தது, பணம் கொடுத்தது, மற்றும் சாமிநாதன் யார் என அவரை அடையாளம் காட்டியது போன்ற குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து நான்கு பேரையும் போலீசார் அரியலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்- 1 நீதிபதி அறிவு முன்பு ஆஜர்படுத்தினர்.கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், போலீசார் அனைவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 10 Sep 2022 1:02 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?