அரியலூர் மாவட்டத்தில் மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வினியோகம்

அரியலூர் மாவட்டத்தில் மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று கலெக்டர் அறிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது

இந்தியத் தேர்தல் ஆணையம் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட அறிவுரையினை செயல்படுத்திடும் விதமாக இவ்வலுவலகம் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளையும், வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் 01.10.2021 முதல் நடைமுறைக்கு வரும். எனவே, அனைத்து வாக்காளர்களும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 13 Sep 2021 2:07 PM GMT

Related News