/* */

கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப்: அதிகாரிகளே உஷார் ஏமாற வேண்டாம்..!

அரசு உயர் அலுவலர்களுக்கு கலெக்டர் பெயரில், போலி வாட்ஸ்அப் கால்.. வாட்ஸ்அப் மெசேஜ்..! –கலெக்டர் எச்சரிக்கை

HIGHLIGHTS

கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப்: அதிகாரிகளே உஷார் ஏமாற வேண்டாம்..!
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் தன்னுடைய அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், முகம் தெரியாத நபர்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் புகைப்படத்தை முகப்புத்தோற்றமாக வைத்த 7061656848 மற்றும் 9390453112 ஆகிய தொலைபேசி எண்களிலிருந்து வாட்ஸ்அப் கால் (Whatsapp Call) மூலமாகவும், வாட்ஸ்அப் மெசேஜ் (Whatsapp Message) மூலமாகவும் அரசு உயர் அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டரின் பெயரில் பரிசுப் பொருட்களை கேட்டு, வாட்ஸ்அப், குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொள்வதாக தகவல்கள் வரப்பெற்றுள்ளது.

அரியலூர் மாவட்ட கலெக்டர், அரசின் தொலைபேசி எண்ணை மட்டும் தொடர்ந்து உபயோகப்படுத்தி வருகிறார்கள். எனவே, அரியலூர் மாவாட்ட கலெக்டரின் புகைப்படத்தை முகப்பு தோற்றமாகக் கொண்ட 7061656848 மற்றும் 9390453112 ஆகிய தொலைபேசி எண்களிலிருந்து அலுவல் சார்ந்த பணிக்கு பரிசுப்பொருட்கள் கேட்டு, வரபெறும் எவ்வித அழைப்புகளையும் அரசு உயர் அலுவலர்கள் ஏற்க வேண்டாம். மேலும், இதற்கு முன்பு ஏதேனும் இந்த தொலைபேசி எண்களிலிருந்து வரப்பெற்ற அழைப்புகள் மூலம் பரிசுப்பொருட்கள் கேட்கப்பட்டிருந்தால், அதற்கும் மாவட்ட கலெக்டருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அரசு உயர் அலுவலர்கள் 7061656848 மற்றும் 9390453112 ஆகிய தொலைபேசி எண்களிலிருந்து வரப்பெறும் எவ்வித அழைப்புகளையும் ஏற்க வேண்டாம் எனவும், எவ்வித பரிசுப்பொருட்களையும் வழங்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுவதுடன், மேலும் மேற்கண்ட எண்களிலிருந்து ஏதேனும் அழைப்புகள் வந்தால் உடனடியாக அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் இதன் மூலம் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 18 May 2022 3:38 PM GMT

Related News