/* */

கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஜன.15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவியர்கள் மேற்படி காலகெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

HIGHLIGHTS

கல்வி உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஜன.15 வரை கால அவகாசம் நீட்டிப்பு
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்,

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பதினொன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி., படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களிடமிருந்து 2021-2022ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளிமேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க 15.01.2022 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி காலகெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை கோரி மாணவ மாணவியர்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்க வேண்டும் எனவும் தகுதியுள்ள சிறுபான்மையின மாணவ, மாணவியரின் விண்ணப்பத்தினை சரிபார்ப்பதில் சுணக்கம் காட்டும், தவறும் கல்வி நிலையங்களின் மீது அரசால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. (சரிபார்க்க கடைசி தேதி: பள்ளி படிப்பு உதவித்தொகை-15.01.2022, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை 31.01.2022).

மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Jan 2022 6:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  4. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  5. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  7. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  8. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!