/* */

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில்  இலவச பயிற்சி வகுப்பு
X

சித்தரிக்கப்பட்ட படம்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் பிரத்யேகமாக மெய்நிகர்கற்றல் இணையதளம் https://tamilnaducareerservices.tn.gov.in உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விணையதளத்தில் TNPSC, TNUSRB, IBPS, SSC, RRB & UPSC போன்ற பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடகுறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள், காணொளிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள தொகுதி- II, IIA, IV & VII மற்றும் தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள சார் ஆய்வாளர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் பணிக்காலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு 20.12.2021 முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடை பெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் இளைஞர்களுக்கு இலவச பாடகுறிப்புகள் வழங்கப்பட்டும், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டும் வருகிறது. இவ்விலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ மாணவியர்கள் கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம் (Passport size Photo), தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் (BIO-DATA) அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்புகொள்ளலாம்.

எனவே அரியலூர் மாவட்டத்தினை சார்ந்த போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 17 Dec 2021 11:06 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்