/* */

சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சமையல் போட்டி

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சமையல் போட்டி நடந்தது.

HIGHLIGHTS

சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சமையல் போட்டி
X

அரியலூர் மாவட்ட அளவில் நடந்த சமையல் போட்டியை ஆட்சியர் ரமணசரஸ்வதி ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவு திட்டத்தில் 2021-2022ஆம் ஆண்டிற்கு வட்டார அளவிலான சமையல் போட்டிகள் 24.12.2021, 28.12.2021 மற்றும் 29.12.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இப்போட்டிகளின்போது தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சமையல் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இப்போட்டியினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த உணவுகள் குறித்தும், செயல்முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், சமையல் போட்டியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு சமையல் பணியாளர்களின் சீருடை தோற்றம், உணவு தயாரிக்கும் முறை, உணவின் சுவை மணம், தரம், சத்துக்கள் மற்றும் சமையல் போட்டியில் காட்சிபடுத்தப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சமையலர் மற்றும் சமையல் உதவியாளரை தேர்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது மற்றும் சான்றுகள் 26.01.2022 குடியரசு தினத்தன்று மாவட்ட கலெக்டரால் வழங்கப்படவுள்ளது.

Updated On: 14 Jan 2022 8:51 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்