/* */

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு மின் கட்டண உயர்வை வாபஸ்பெறக்கோரி ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

மின்கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

தமிழக அரசு அண்மையில் உயர்த்திய மின்கட்டண உயர்வால் ஏழை எளிய பொதுமக்களும் விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்படுபவர். எனவே தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். விவசாய மின் இணைப்புக்கு வழங்கப்படும் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் தொடர்ந்து பயிர்களுக்கு தண்ணீர் விட முடியாத நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிரிடப்பட்டுள்ள மாணவர் பெயர்கள் நீரின்றி காய்ந்து போகின்றது. எனவே தடை இன்றி விவசாய மின்சாரத்தை வழங்க வேண்டும்.

மேலும் தற்பொழுது குறுவை சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் குறுவை சாகுபடி திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும் தடை இன்றி யூரியா வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 July 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  2. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  3. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  6. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  7. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  8. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  9. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...