/* */

மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கத்தினர் மற்றும் திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் செந்துறை பிரிவு சாலையில், மறியல் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அரியலூர் அண்ணாசிலை அருகில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகரச்செயலாளர் முருகேசன், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் இளையராஜா, துணைப்பொதுச்செயலாளர் பாலு, ஏஜடியூசி மாவட்டச்செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக தொழிற்சங்கத்தினர் மற்றும் திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் செந்துறை பிரிவு சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை வஞ்சிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், 100 நாள் வேலையில் சாதிவாரியாக வேலை, கூலி வழங்குவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், திருமானூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

Updated On: 27 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்