/* */

ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு இஸ்லாமிய இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு இஸ்லாமிய இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு இஸ்லாமிய இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
X

முகமது நபியை இழிவு படுத்தும் விதமாக பேசிய நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு இஸ்லாமிய இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இஸ்லாமிய மக்களின் இறைத்தூதராக கருதப்படும் முகமது நபியை இழிவுபடுத்தும் விதமாக பேசிய பாஜகவைச் சேர்ந்த நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி, ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு இஸ்லாமிய இயக்கங்கள் ஐக்கிய முஸ்லிம் ஜமாத் மாவட்ட செயலாளர் முகமது ஷெரீப் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் யாகூப், தலைமை கழக பேச்சாளர் காதர்பாட்சா, எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ரெத்தினம் அண்ணாச்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பொறுப்பாளர் அப்துல் ரகுமான், விசிக மண்டல அமைப்புச் செயலாளர் திருமார்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது தொடர்ந்து இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பேசி வரும் பாஜகவின் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 40 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jun 2022 2:12 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  4. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  6. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  7. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  8. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  9. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?