அரியலூர் அருகே நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அருகே முடிகொண்டான் கிராமத்தில் நெற் பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரியலூர் அருகே நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.


அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக அப்பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்களின் கரைகள் ஆங்காங்கே உடைப்பு எடுத்து சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும், முடிகொண்டான் பிரிவு சாலையில் உள்ள சிறு பாலத்தை உயர்த்திக்கட்ட வலியுறுத்தியும் அக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் முடிகொண்டான் பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த திருமானூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Updated On: 7 Dec 2021 5:36 AM GMT

Related News